search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக முதலமைச்சர்"

    பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்துவரும் பாஜக கூட்டணி அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்



    இரண்டாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதன் மூலம் நாட்டு மக்கள் பெருமையடைகிறார்கள். தங்களது தலைமையில் கீழ் நாடு சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று தனது வாழ்த்து கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். #MGR #MGRCommemorativeCoin
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து பகுதிகளிலும் எம்ஜிஆர் உருவச்சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகின்றன. இதுதவிர அதிமுக கிளைக் கழகங்கள் சார்பில் அனைத்து பகுதிகளிலும் எம்ஜிஆர் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகின்றன.



    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில், எம்ஜிஆர்  சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    அதன்பின்னர் தமிழக அரசின் சார்பில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, எம்ஜிஆர் சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    பின்னர், அங்கு நடந்த விழாவில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர். #MGR #MGRCommemorativeCoin

    சித்தா ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் மூலம் கலந்தாய்வு நடத்தக்கூடாது என தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #NEET #NEETForIndianMedicine
    சென்னை:

    நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வின் மூலம் கலந்தாய்வு  நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.



    தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி சி.பி.எஸ்.இ.-க்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கவுன்சிலிங்கை எப்படி நடத்துவது? என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    அதன்பின்னர், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ  படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தக்கூடாது என்றும், பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. #NEET #NEETForIndianMedicine

    ×